திருவாரூர் மாவட்டத்திற்கு கடந்த 22.10.2025 அன்று.. அதிமுக பொதுச்செயலாளரும்..தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும்.. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான புரட்சித் தமிழர் எடப்பாடியார்… தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்ட பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்.. மற்றும் மழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்..
அப்போது நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நெல் இயக்கமில்லாமல் தேக்கமடைந்த அவல நிலை குறித்து போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவித்தார்.
அதன் பிறகு..விவசாயிகளிடமிருந்து
கொள்முதல் செய்யப்பட்ட நெல் வெளி மாவட்டங்களுக்கு அறவைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்..
ஆனால் பல இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் தேக்கம் அடைந்துள்ளதாக
கூறப்படுகிறது. மேலும் திருவாரூர் அருகே மணக்கால் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் 4,000 நெல் மூட்டைகள் இயக்கமில்லாமல் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
வேகன் இல்லாத காரணத்தினால் நெல் முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதாக சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் மணக்கால் பகுதியில் சில இடங்களில் குறுவை அறுவடை விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொட்டி வைத்துள்ளனர்.

















