கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக பெங்களூருக்கு புதிய வந்தேபாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கிவைக்கிறார்.
வாரணாசியில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில், எர்ணாகுளம் – பெங்களூரு, பனாரஸ் — கஜூராஹு, லக்னோ — சஹரான்பூர், ஃபிரோஸ்பூர் — தில்லி ஆகிய 4 வழித்தடங்களில் புதிய வந்தேபாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கிவைக்க உள்ளார்.
எர்ணாகுளம் – பெங்களூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் விரைவு ரயில் சேவை பயண நேரத்தை 2 மணி நேரம் வரை குறைக்கிறது. இந்த ரயில் திரிச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணராஜபுரம் வழியாக பெங்களூரு செல்லும்.
















