சட்டம் ஒழுங்கை சரிசெய்ய இயலவில்லை என்றால், முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என பிஜேபி மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் பிஜேபி மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழிசை சவுந்தரராஜன், நடிகை குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, பெண்கள் பாதுகாப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டம் நடத்தாமல், தேர்தல் வெற்றிக்கான ஆலோசனைக் கூட்டம் நடத்திக்கொண்டிருப்பதாக விமர்சித்தார். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க டாஸ்மாக் தான் முக்கியக் காரணம் என்று அவர் குற்றம்சாட்டினார்.
















