அன்புமணியின் செயல்பாடுகள் அருவருக்கத்தக்க வகையில் உள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அரசியலில் சில தவறுகளை செய்துள்ளேன். அதில் முதல் தவறு அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது. இரண்டாவது தவறு அன்புமணிக்கு கட்சித் தலைவர் பொறுப்பு தந்தது என கூறினார். நடக்கும் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். என்னை ஐயா என்று அழைத்த சிலர், அன்புமணியுடன் சேர்ந்துகொண்டு என்னைப் பற்றி திட்டிப் பேசுகிறார்கள் என்று கூறி வருத்தப்பட்டார். எம்எல்ஏக்களில் 2 பேர் என்னோடு இருக்கிறார்கள் 3 பேர் அன்புமணி கும்பலோடு தெரியாமல் போய் விட்டார்கள் என்ற அவர் அன்புமணியின் செயல்பாடுகள் அருவருக்கத்தக்க வகையில் உள்ளது எனவும், பாமகவில் பிளவு இருக்கிறது என மற்றவர்கள் நினைக்கும் அளவுக்கு அன்புமணி செயல்படுகிறார் எனவும் அவர் தெரிவித்தார்.
















