பீகாரில் நடைபெறும் முதல்கட்ட தேர்தலில் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பீகார் மாநில சட்டசபைக்கு முதல்கட்டமாக 121 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் அதிகளவில் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்த வண்ணம் உள்ளனர்.
இந்தநிலையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பீகார் வாக்காளர்கள் முதல் கட்டத் தேர்தலில் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் முதல் முறை வாக்காளர்களுக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

















