- பீஹார் சட்டசபை தேர்தல் இன்று ( நவ.,06) நடக்கும் நிலையில் வாக்காளர்கள் அதிகளவு ஓட்டுப்போட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள காங்கிரஸ் எம்பி ராகுல், ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள் எனக்கூறியுள்ளார்.
- கோவையில் கல்லுாரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான மூவரையும் வரும், 19ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
- கியூ.எஸ்., நிறுவனம் வெளியிட்ட, பல்கலைகளுக்கான ஆசிய தரவரிசை பட்டியலில், இந்திய பல்கலை.கள், கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் சறுக்கல்களை சந்தித்துள்ளன. தமிழகத்தின் அண்ணா பல்கலை, 177வது இடத்தில் இருந்து, 204வது இடத்துக்கு பின் தங்கியுள்ளது.
- ஓடிடி தளத்தில் வெளியான பிரபல தொடரால் ஈர்க்கப்பட்டு ரூ.150 கோடி கொள்ளையடித்த கும்பலை டில்லி போலீசார் கைது செய்தனர்.
- சர்ச்சைக்குரிய முஸ்லிம் மதபோதகர் ஜாகிர் நாயக், வங்கதேசத்தில் நுழைய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
- தன் நிறுவனங்கள் பெயரில் வாங்கிய கடனை மற்ற நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக பயன்படுத்திய புகார் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையைத் தொடர்ந்து மத்திய கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகமும் விசாரணையை துவக்கியுள்ளது.
- உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
- கேரளாவில் கடந்த 5 நாட்களில் 4 பேர் மூளையை தின்னும் அமீபா தொற்றில் உயரிழந்துள்ளது , பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டில் இதுவரை , கேரளாவில் 160 பேர் பாதிக்கப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் 37 பேர் உயிரிழந்தனர்.
- அணு ஆயுத திட்டத்தை ஈரான் நிறுவனத்திற்கு விற்க முயன்றது, போலீசாரால் கைது செய்யப்பட்ட 60 வயது போலி விஞ்ஞானியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

















