சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகில் மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின்படி, சீர்காழி டி.எஸ்.பி அண்ணாதுரை மேற்பார்வையில் மயிலாடுதுறை மாவட்ட ஆயுதப்படை டி.எஸ்.பி.கிருஷ்ணன் தலைமையில் இருசக்கரவாகன ஓட்டிகளுக்கு தலைகவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்வு காவல்துறை சார்பில் நடத்தப்பட்டது. அப்போது அப்பகுதி வழியாக வந்த சுமார் 100க்கும் மேற்பட்ட இருசக்கரவாகனஓட்டிகளை நிறுத்தி டி.எஸ்.பி கிருஷ்ணன் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கி பேசுகையில், இருசக்கரவாகன ஓட்டிகள் அவசியம் தலைகவசம் அணிந்துதான் வாகனத்தை இயக்கவேண்டும்,வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசுவதை தவிர்க்க வேண்டும்,அவசர அழைப்பு என்றால் இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு பேசவேண்டும், ஓட்டுனர் உரிமம்,வாகன இன்சுரன்ஸ் இல்லாமல் வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.18 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி சிறுவர்களிடம் பெற்றோர்கள்,உறவினர்கள் இருசக்கர வாகனங்களை இயக்கிட அனுமதிக்ககூடாது.அவ்வாறு சிறுவர்கள் வாகனங்கள் இயக்க அனுமதித்தால் பெற்றோர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு,சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சாலைவிதிகளை கடைபிடிக்காமலும்,தலைகசவம் அணியாமலும் செல்லும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது போக்குவரத்து சிறப்பு உதவிஆய்வாளர்கள் பிறைசந்திரன், செந்தில்குமார் மற்றும் போக்குவரத்து காவலர்கள் கார்த்திக் ல,கலைமணி, உடனிருந்தனர்.


















