கடற்படை தகவல் தொடர்புக்கான அதிக எடையுடைய சி.எம்.எஸ்.-03 என்ற
செயற்கைக்கோளுடன், எல்.வி.எம்.3-எம் -5 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்த ராக்கெட் நேற்று மாலை 5.26 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. அப்போது அங்கு கூடியிருந்த விஞ்ஞானிகள் மற்றும் பொது மக்கள் கைத்தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த ராக்கெட்டில் 4 ஆயிரத்து 410 கிலோ எடை கொண்ட, பாகுபலி என்று அழைக்கப்படும் சி.எம்.எஸ்-03 செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது. செயற்கைகோள் புவி வட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. இந்த செயற்கைகோள், தகவல் தொடர்புக்கு உதவியாக இருக்கும் என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

















