ஈரோடு : அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக வலிமை பெற வேண்டும் என்பதற்காகத்தான் தேவர் ஜெயந்தி விழாவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனை சந்தித்தேன். இத்தனை ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்த என்னை நீக்கியது எனக்கு மிகுந்த வேதனையாக உள்ளது. ஈபிஎஸ் எடுத்த முடிவால் நான் கண்ணீர் சிந்தும் நிலையில் இருக்கிறேன்,” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது: “கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் குறித்து இதுவரை எடப்பாடி பழனிசாமி வாய்திறக்கவில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகப் பேசும் அவர், துரோகிகளுக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என்றால் அதற்கு பொருத்தமானவர்,” என செங்கோட்டையன் கடுமையாக விமர்சித்தார்.
அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியது தொடர்பாக வழக்கு தொடரப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
















