November 13, 2025, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

பந்தளராஜனின் 18 படி உணர்த்தும் தத்துவம்

by Satheesa
November 1, 2025
in Bakthi
A A
0
பந்தளராஜனின் 18 படி உணர்த்தும் தத்துவம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

காமம் : பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.

குரோதம் : கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.

லோபம் : பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.

மதம் : யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.

மாத்ஸர்யம் : மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.

டம்பம் : அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.

அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.

சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.

ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.

தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது. ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.

மனம்: நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.

அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள். கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.

காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.

மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும். நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.

மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.

இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும். இவையே சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்.

18 படி தெய்வங்கள்:

ஐயப்பன் கோயிலில் உள்ள 18 படியிலும் 18 தெய்வங்கள் விநாயகர்
சிவன்
பார்வதி
முருகன் பிரம்மா வி~;ணு ரங்கநாதர் காளி எமன் சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி
ராகு கேது

18 பதினெட்டுப் படிகளின் தாத்பரியம் என்ன?

முதல் படி: வி~hத யோகம். பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும் என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்மத் துடிப்பே வி~hத யோகம் இதுவே முதல் படி.

இரண்டாம் படி: சாங்கிய யோகம். பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது இரண்டாவது படி.

மூன்றாம் படி: கர்மயோகம். உபதேசம் பெற்றால் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம் மூன்றாவது படி.

நான்காம் படி: ஞான கர்ம சன்னியாச யோகம். பாவம், புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன்மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறுவது நான்காம் படி.

ஐந்தாம் படி: சன்னியாச யோகம். நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி.

ஆறாம் படி: தியான யோகம். கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக்கூடாது. இதுவே ஆறாவது படி.

ஏழாம் படி: ஞானம். இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான்.. எல்லாமே கடவுள்தான் என உணர்வது ஏழாவது படி.

எட்டாம் படி: அட்சர பிரம்ம யோகம். எந்நேரமும் இறைவனைப்பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது எட்டாவதுபடி.

ஒன்பதாம் படி: ராஜவித்ய, ராஜ குஹ்ய யோகம். கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத்தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மிகம் என்று உஈணர்வது ஒன்பதாம் படி.

பத்தாம் படி: விபூதி யோகம். அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது பத்தாம் படி.

பதினொன்றாம் படி: விஸ்வரூப தரிசன யோகம். ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது பதினொன்றாம் படி.

பன்னிரண்டாம் படி: பக்தி யோகம். இன்பம் – துன்பம், விருப்பு-வெறுப்பு, ஏழை – பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது பன்னிரண்டாம் படி.

பதின்மூன்றாம் படி: N~த்ரக்ஞ விபாக யோகம். எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல் பதின்மூன்றாம் படி.

பதினான்காம் படி: குணத்ர விபாக யோகம். பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம் படி.

பதினைந்தாம் படி: தெய்வாசுர விபாக யோகம். தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி.

பதினாறாம் படி: சம்பத் விபாக யோகம். இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது பதினாறாம் படி.

பதினேழாம் படி: சிரித்தாத்ரய விபாக யோகம். சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது பதினேழாவது படி.

பதினெட்டாம் படி: மோட்ச சன்யாச யோகம். யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது பதினெட்டாம் படி.

சத்தியம் நிறைந்த இந்தப் பதினெட்டுப் படிகளையும் படிப்படியாய் கடந்து வந்தால், நம் கண் எதிரே அந்த கரிமலை வாசன், மணிகண்ட பிரபு பேரொளியாய் தரிசனம் தருவார். நம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே ஐயனின் பதினெட்டுப் படிகள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.

Tags: aanmigamaiyappan historyaiyappan storybakthiBandalaraja's 18-step philosophy of perceptionpadipoojatamilnaduTemple History
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பிகாரில் வளர்ச்சி என்டிஏ ஆட்சியில்தான் சாத்தியம் : முதல்வர் நிதிஷ்குமார்

Next Post

முதலில் இந்தியா தான் குரல் கொடுக்கும் – மோடி பெருமிதம்

Related Posts

திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் துலா உற்சவத்தை முன்னிட்டு கருட சேவை
Bakthi

திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் துலா உற்சவத்தை முன்னிட்டு கருட சேவை

November 12, 2025
மாயூரநாதர் ஆலயத்தின் துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான மயிலம்மன் பூஜை அம்பிகை உருவம் கொண்டு சோடசதீபாரதனை
Bakthi

மாயூரநாதர் ஆலயத்தின் துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான மயிலம்மன் பூஜை அம்பிகை உருவம் கொண்டு சோடசதீபாரதனை

November 12, 2025
திண்டுக்கல் நத்தம் அய்யாபட்டி கும்பாபிஷேகம்!
Bakthi

திண்டுக்கல் நத்தம் அய்யாபட்டி கும்பாபிஷேகம்!

November 12, 2025
மயிலாடுதுறை காவிரி துலா உற்சவத்தின்5-ம் நாள் ஐதீகத் திருவிழா மயில் உருவில் நடனமாடி தீர்த்தவாரி உற்சவம்
Bakthi

மயிலாடுதுறை காவிரி துலா உற்சவத்தின்5-ம் நாள் ஐதீகத் திருவிழா மயில் உருவில் நடனமாடி தீர்த்தவாரி உற்சவம்

November 11, 2025
Next Post
முதலில் இந்தியா தான் குரல் கொடுக்கும் – மோடி பெருமிதம்

முதலில் இந்தியா தான் குரல் கொடுக்கும் - மோடி பெருமிதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“அறிவுத் திருவிழா அல்ல, அவதூறுத் திருவிழா” – விஜய் கண்டனம் !

“அறிவுத் திருவிழா அல்ல, அவதூறுத் திருவிழா” – விஜய் கண்டனம் !

November 12, 2025
பேண்டு வாத்தியம் முழங்க மாபெரும் கையெழுத்து பிரச்சாரம்

பேண்டு வாத்தியம் முழங்க மாபெரும் கையெழுத்து பிரச்சாரம்

November 12, 2025
வீடு தேடி வரும் ரூ.5000.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ?

வீடு தேடி வரும் ரூ.5000.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ?

November 12, 2025
யாருமே போகாத இடத்துல யாருக்கு பாலம்? – கேள்வியெழுப்பும் பொதுமக்கள்

யாருமே போகாத இடத்துல யாருக்கு பாலம்? – கேள்வியெழுப்பும் பொதுமக்கள்

November 12, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 13 November 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 13 November 2025 | Retro tamil

0
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: சேலம் ஆட்சியர் ஆய்வு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: சேலம் ஆட்சியர் ஆய்வு!

0
கிருஷ்ணகிரியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்: 379 மனுக்கள் ஏற்பு.

கிருஷ்ணகிரியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்: 379 மனுக்கள் ஏற்பு.

0
நாமக்கல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்  நலத்திட்ட உதவி

நாமக்கல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்  நலத்திட்ட உதவி

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 13 November 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 13 November 2025 | Retro tamil

November 13, 2025
இன்றைய ராசிபலன் – நவம்பர் 12, 2025  (புதன்கிழமை)

இன்றைய ராசிபலன் – நவம்பர் 13, 2025 (வியாழக்கிழமை)

November 13, 2025
கிருஷ்ணகிரியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்: 379 மனுக்கள் ஏற்பு.

கிருஷ்ணகிரியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்: 379 மனுக்கள் ஏற்பு.

November 12, 2025
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: சேலம் ஆட்சியர் ஆய்வு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: சேலம் ஆட்சியர் ஆய்வு!

November 12, 2025

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.