பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் தயாரித்த ரஃபேல் போர் விமானங்கள், கடந்த 2020-ஆம் ஆண்டில் இந்திய விமானப்படையில் முறையாக சேர்க்கப்பட்டது. ரஃபேல் விமானம் மணிக்கு 2 ஆயிரத்து 200 கிலோ மீட்டர், வேகத்தில் பயணம் செய்யும் வல்லமை கொண்டது.
ஹரியானா மாநிலத்தின் அம்பாலா விமானப்படை தளம், கடந்த மே மாதம் ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கையின் போது, முக்கிய பங்கு வகித்தது. இங்கிருந்து தான், பாகிஸ்தானின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில் அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து, ரஃபேல் போர் விமானத்தில், திரௌபதி முர்மு பயணம் செய்தார். பாதுகாப்பு கவச உடைகள் அணிந்து, விமானத்தில் பறந்தார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மற்றும் பிரதிபா பாட்டீல் ஆகியோர் சுகோய்-30 ரக போர் விமானங்களில் பயணம் செய்து இருக்கின்றனர். இதனால், போர் விமானத்தில் பறந்த மூன்றாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையை திரௌபதி பெற்றிருக்கிறார்.
ஏற்கனவே, 2023ம் ஆண்டு அசாமின் தேஜ்பூர் விமானப் படைத்தளத்தில் இருந்து, சுகோய் 30 ரக போர் விமானத்தில், திரவுபதி முர்மு பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
















