- தமிழகத்தில் இன்று (அக் 25) 12 மாவட்டங்களிலும், நாளை (அக் 26) 6 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- பாமக செயல் தலைவர் பதவியை தனது மூத்த மகள் ஸ்ரீகாந்திக்கு வழங்குவதாக, நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
- ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டிரம்ப் மலேசியாவுக்கு புறப்பட்டார். அவரின் வருகையை எதிர்த்து, கோலாலம்பூரில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு, மலேசிய இஸ்லாமிய கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
- இந்த தசாப்தம் பிரதமர் மோடிக்கு சொந்தமானது. பீஹார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே அக்.28ல் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேரள சுற்றுப்பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
- சென்னையில் இன்று (அக் 25) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
- சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்ட ஏர் ஏசியா விமானத்தின் மீது பறவை மோதியதில் இன்ஜின் பகுதி சேதம் அடைந்தது. இதனால் விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப் பட்டது.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஓருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா சதமடிக்க, விராட் கோஹ்லி அரைசதம் அடித்தார்.
- ரஷ்ய எரிசக்தி துறை மீதான தடைகளை விரிவுப்படுத்த வேண்டும். ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை வழங்குமாறு அமெரிக்காவிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

















