சென்னையில் ஐந்தாம் வகுப்பு மாணவியை தரை துடைக்கும் மாப்பால் அடித்த மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
புழுதிவாக்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சுரேஷின் மகள் லித்திஷா அங்குள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒன்பதாம் தேதி வீட்டுப்பாடத்தை பென்சிலுக்கு பதில் பேனாவில் எழுதியதாககூறி, லித்திஷாவை பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்திரா காந்தி, தரையை துடைக்கும் மாப்பால், உடம்பில் பல்வேறு இடங்களில் அடித்துள்ளார்,
இதனால் மாணவிக்கு காயம் ஏற்பட்டு வீங்கி உள்ளது.இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில், தலைமை ஆசிரியர் மீது புகார் அளித்துள்ளனர். இதனிடையே, தலைமை ஆசிரியர் இந்திரா காந்தியை பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
















