சிவகங்கை மாவட்டம் வேட்டங்குடி-கொள்ளுகுடிப்பட்டி சரணாலயத்திற்கு வரும் வெளிநாட்டு பறவைகளுக்காக, சுற்றுவட்டார கிராம மக்கள் சுமார் 50 ஆண்டுககளாக வெடி வெடிக்காமல் உள்ளனர்.
சிங்கம்புணரி அருகே புகழ்பெற்ற வேட்டங்குடி-கொள்ளுகுடிப்பட்டி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு வரும் பறவைகளின் நலனுக்காக, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தீபாவளி, சுப மற்றும் துக்க நிகழ்ச்சிகளுக்கும் பட்டாசுகளை வெடிப்பதில்லை.
இவர்களை பாராட்டும் வகையில், ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில், இப்பகுதி மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, கிராம மக்களுக்கு இனிப்புகளை வழங்கி, பாராட்டினார்.
 
			















