தீபாவளி பண்டிகை யொட்டி சென்னை அடுத்த கிளாபாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் புக்கதுறை வரை 35- கிலோமீட்டர் போக்குவரத்து தடைபட்டது. சென்னையில் இருந்து தீபாவளி பண்டிகை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு மற்றும் வட மாவட்டங்களுக்கு பண்டிகை கொண்டாட வாகனங்களில் நேற்று இரவில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு சொந்த வாகனங்களிலும் , ஆம்னி பஸ் மற்றும் அரசு பேருந்து களிலும் நேற்று மாலையில் இருந்து இன்று 9-மணி வரை போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. பரனூர் டோல்கேட்டில் இருந்து செங்கல்பட்டு டவுன் வழியாக திருக்கழுக்குன்றம் கல்பாக்கம் ஈ. சி. ஆர் சாலை வழியாக நெரிசலை கட்டுப்படுத்த வாகனங்கள் காவல்துறையினர் திருப்பி விடுகின்றனர். பரனூர் டோல்கேடில் இருந்து செங்கல்பட்டு சுமார் மூன்று கடக்க இரண்டு மணிநேரம் கணக்க செலவாகிறது

 
			














