தமிழகத்தில் 2026-ல் நடக்கும் சட்டமன்ற தேர்தலில், நான்குமுனை போட்டி நிலவும் என, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவிலில், அமமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட டிடிவி தினகரன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, சட்டமன்ற தேர்தலில், நான்கு முனை போட்டி நிலவும் என கூறினார். தேர்தல் நெருங்கும் நேரத்தில், விஜய் தலைமையில் எதிர்பாராத கூட்டணி உருவாக வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தங்கள் கட்சிக்காரர்களையே கூட்டத்தில் த வெ க கொடியை ஆட்டச்சொல்லி விஜய்க்கு கூட்டணிக்கு தூது விட்டு வருகிறார் என்றும் கூறினார்.
 
			















