- தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. மறைந்த முன்னாள் எம்எல்ஏ.,க்கள் மற்றும் கரூர் சம்பவத்திற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- ”தி.மு.க., அரசின் தலையில் உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளதால் தலைகுனிந்து நிற்கிறது,” என, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பா.ஜ., சார்பில் நடந்த தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் பிரசாரத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.
- எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியாக, ஜி.எஸ்.டி., கட்டண சலுகையுடன், தலா, 3 கோடி ரூபாய் என, 702 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.
- பீஹார் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாஜவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 71 பேர் கொண்ட இப்பட்டியலில் துணை முதல்வர்கள் போட்டியிடும் தொகுதிகள் வெளியாகியுள்ளன. சபாநாயகர் தொகுதி குறித்து அறிவிப்பு இல்லை.
- ஆந்திராவின் விசாகபட்டினத்தில் கூகுள் நிறுவனத்தின் தகவல் மையத்துடன் கூடிய, செயற்கை நுண்ணறிவு மையம் (AI Hub) 15 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1.2 லட்சம் கோடி) முதலீட்டில் அமைகிறது என அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை அறிவித்து உள்ளார்.
- டாஸ்மாக் முறைகேடு புகார் வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ”உங்களுக்கு சந்தேகம் இருந்தாலே எந்த அரசு நிறுவனத்திலும் உள்ளே நுழைந்து சோதனை செய்து ஆவணங்களை எடுத்துச் செல்வீர்களா,” என அமலாக்கத்துறைக்கு கேள்வி எழுப்பினர்.
- இத்தாலி பிரதமர் மெலோனி மிகவும் அழகானவர் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்ணித்துள்ளார்.
- ஜாதிப் பெயர்களை நீக்கும் அரசாணையை வெளியிட்டதற்காக முதல்வரை சந்தித்து நன்றி கூறினோம் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
- இஸ்ரேல்-ஹமாஸ் அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் வரவேற்றுள்ளார். பிராந்தியத்தில் அமைதி நிலவ எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கை என்றும் அவர் பாராட்டி இருக்கிறார்.
- தோஹாவிலிருந்து ஹாங்காங்கிற்குச் சென்ற கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட நிலையில் ஆமதாபாத்திற்கு திருப்பிவிடப்பட்டது.