சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (65), இவரது மனைவி செல்வபதியுடன் இருசக்கர வாகனத்தில் திருமுல்லைவாசலில்இருந்து சீர்காழி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது வழுதலைக்குடி என்ற இடத்தில் அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்ற அதிவேகத்தில் வந்த தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த செல்வம் மீது பேருந்து ஏரி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரது மனைவி செல்வபதி தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
