ஸ்டார்ஷிப் சூப்பர் ஹெவி ராக்கெட் 11ஆவது சோதனை பயணத்தை, வெற்றிகரமாக முடித்துள்ளதாக, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட்டின் சூப்பர் ஹெவி பூஸ்டர், மெக்சிகோ வளைகுடா கடலில் பத்திரமாக தரையிறங்கியது.
சந்திரன், செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் உள்ள கிரங்களுக்கு எதிர்கால பயணங்களை மேற்கொள்ளும் வகையில், திறமையான, விண்வெளி வாகனங்களை உருவாக்கும் திட்டத்தில், இந்த சோதனை முக்கியமான அத்தியாயம் என, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. வளமண்டலத்தில், ராக்கெட்டின் பாதுகாப்பை மேம்படுத்துதல், நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் பாதுகாப்பாக தரையிறங்குதல் உள்ளிட்டவை குறித்தும், ஆராய்ச்சி செய்யப்பட்டதாக ஸ்பேஸ் எக்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.