ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் ஆயிரத்து 960 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 94 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளியும் கிலோவுக்கு 9 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, புதிய உச்சம் பெற்றிருக்கிறது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை தினசரி 2 முறை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் ஆபரணத் தங்கத்தின் விலை, ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. இன்று மட்டும் சவரனுக்கு ஆயிரத்து 960 ரூபாய் உயர்ந்திருக்கிறது.
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம், 11 ஆயிரத்து 825 ரூபாயாகவும், ஒரு சவரன் 94 ஆயிரத்து 600 ரூபாயாகவும் உள்ளது. இதேபோல், வெள்ளி கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்திருக்கிறது. இதனால், வெள்ளி ஒரு கிராம் 206 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 2 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.