கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களை தத்தெடுக்கும் முடிவை தவெக தலைவர் விஜய் எடுத்துள்ளார் என்று கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
கரூர் நிகழ்வில் சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது விஜய்க்கு சாதகமாக அமைந்துள்ளதாக அவர் கூறினார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கல்வி, மருத்துவம், மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான அனைத்து செலவுகளையும் விஜய் தனிப்பட்ட முறையில் ஏற்கவுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.
“கரூரில் உயிரிழந்தவர்கள் எங்கள் குடும்பத்தின் அங்கங்கள். அவர்களை பாதுகாப்பது எங்கள் கடமை. அந்தக் குடும்பங்களில் ஒருவனாக விஜய் இருப்பார்,” என ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களிடம் கூறினார்.
விஜயின் இந்த முடிவு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள், “மக்களின் துயரத்தில் நின்று துணை நிற்பதே உண்மையான தலைவர் பண்பு” என பாராட்டி வருகின்றனர்.