- அரசுமுறைப் பயணமாக கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் இன்று இந்தியா வந்தார்.
- எகிப்தில் நடைபெறும் உச்சி மாநாட்டில் டிரம்ப் கலந்து கொள்ளும் முன், ஹமாஸ் வசமுள்ள 20 பிணையக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் கூறியுள்ளார்.
- கேரளாவில், மூளையைத் தின்னும் அமீபா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
- ஆப்கானிஸ்தான் எல்லையில் நடந்த மோதலில் 200க்கும் மேற்பட்ட தலிபான்களை கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது.
- பீஹார் சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டை பாஜ தலைமையிலான என்டிஏ கூட்டணி நிறைவு செய்தது. பாஜ மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலா 101 இடங்களில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
- காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து குறித்தும், அதனால் குழந்தைகள் உயிரிழந்தனர் என்பது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் ஏன் பேச மறுக்கிறார் என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
- பாகிஸ்தானுடன் சண்டையை தொடர விரும்பவில்லை என்று டில்லி வந்திருக்கும் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முட்டாகி திட்டவட்டமாக கூறி உள்ளார்.
- திமுக கூட்டணியில் இப்போதே விரிசல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. அதிமுக கூட்டணி குறித்து பேச திமுவுக்கு தகுதி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
- ம.பி.,யில் 21 குழந்தைகள் இறப்புக்கு காரணமான இருமல் மருந்து நிறுவனத்தில் 15 ஆண்டாக தமிழக அரசு ஆய்வு செய்யவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
- சாலைகளில் சுற்றி திரியும் மனநலம் பாதித்தவர்களை அடையாளம் காண்பதிலும், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும், ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அது குறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரலாம்’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.