நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள தாஜ்நகர் பகுதியை சேர்ந்தவர் சூரிய பிரசாந்த்.இவர் அதே பகுதியில் ஜவுளிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் பணிகளை முடித்துக் கொண்டு கடையை பூட்டி விட்டு சென்ற சூரிய பிரசாந்த் இன்று காலை வழக்கம் போல கடையை திறக்க வந்த போது கடையின் இரண்டு பூட்டுகளும் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கடையினுள் சென்று பார்த்த போது கல்லாவில் இருந்த 5000 ரூபாய் பணம், உண்டியல் சேமிப்பு தொகையை வைத்திருந்த 2000 ரூபாய் என மொத்தம் ஏழாயிரம் ரூபாய் பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவலின் பெயரில் அங்கு விரைந்த போலீசார் சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்டு வரும் நிலையில், சிசிடிவி காட்சியில் இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனம் ஒன்றில் வருவதும், அதில் ஒரு இளைஞர் தலைக்கவசம் அணிந்த நிலையிலும் ,மற்றொரு இளைஞர் தலையை முழுமையாக மூடும் வகையில், குல்லா டிரவுசர் உடை அணிந்தபடியும், கடையை நோட்டம் விட்ட பிறகு கையில் கனமான சுத்தியல் போன்று ஒரு ஆயுதத்தை கொண்டு பூட்டை உடைப்பதும், அதன் பிறகு கடையினுள் சென்று பணத்தை திருடுவதும் அந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. மேலும் இந்த கடையில் திருடுவதற்கு முன்பாக முன் பகுதியில் உள்ள ஒரு சில கடைகளில் திருடுவதற்கு முயற்சி செய்து அது பலன் அளிக்காததால் சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்திவிட்டு அதன் பிறகு தான் இந்த கடையினுள் புகுந்து திருடி உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
இந்த திருட்டு தொடர்பாக பள்ளிபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை அடிப்படையில் மர்மன் அவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.













