கோவை அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை வழங்காததால் அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கக்கூடிய மாணவர் உயிரிழந்ததாக கல்லூரியைச் சேர்ந்த சக மாணவர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது..
திருநெல்வேலி சேர்ந்த வசந்த் (19) என்பவர் கடந்த எட்டாம் தேதி மதியம் மூன்று மணியளவில் சுங்கம் அருகே சாலை விபத்தில் சிக்கி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வந்துள்ளனர். கடந்த மூன்று நாட்களாக கொடுக்கப்பட்ட சிகிச்சை மற்றும் எந்த தகவல்களையும் மருத்துவர்களும் செவியிலர்களும் முறையாக தெரிவிக்கவில்லை என மாணவர்கள் குற்றச்சாட்டு வைத்தனர்.
மேலும் சரியான சிகிச்சை கொடுக்காத காரணத்தினால் மாணவர் உயிரிழந்திருப்பதாக குற்றச்சாட்டு வைத்தனர். மேலும் எதற்கு எடுத்தாலும் மருத்துவமனையில் பணம் கேட்டு தொல்லை செய்வதாகவும் ஒவ்வொரு பொருளையும் வெளியே இருந்து வாங்கி வருவதாக மாணவர்கள் கடுமையாக குற்றச்சாட்டு எழுப்பினர். மாணவர்கள் திரண்டதை எடுத்து பந்தய சாலை போலீசார் உடனடியாக மாணவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் ஆனால் மாணவர்கள் உயிரிழப்பு குறித்து சரியான காரணத்தை மருத்துவர்கள் தெரிவிக்க வேண்டும் எனவும் இல்லை என்றால் கலைந்து செல்ல மாட்டோம் எனவும் தெரிவித்தனர்.