2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டைச் சேர்ந்த பெண் போராளி மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்படுவது இன்று அறிவிக்கப்பட்டது. உலகம் முழுவதும் மனித குலத்திற்கு பயனுள்ள செயல்பாடுகளை முன்னிறுத்தி வழங்கப்படும் நோபல் பரிசுகள் வரிசையில், அமைதிக்கான பரிசு தொடர்ந்து பெரிய கவனம் ஈர்த்து வருகிறது.
இந்த பரிசுக்கு முன்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல போர்களை தடுத்து நிறுத்தியதாகவும், தனது பெயரை பரிசுக்கான பரிந்துரையில் இடம்பெறவேண்டும் என தெரிவித்துள்ளார். ஆனால், உலக சக்தியாளர் முன் வெளியிடப்பட்ட பரிந்துரையில் டிரம்ப் உட்பட 338 பேரின் பெயர்கள் இருந்த போதிலும், பரிசு வெனிசுலாவில் சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடிய மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது.
இந்த பரிசு, மனிதாபிமானம் மற்றும் அமைதிக்கான போராட்டத்தில் சிறந்த பங்களிப்புக்கு உலகளவில் தரப்படும் உயரிய கௌரவமாகும்.

















