பீகாரில் கடைப்பிடிக்கப்பட்ட தில்லு முல்லுகளை போல தமிழ்நாட்டிலும் செயல்படுத்தத் பிஜேபி திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு குற்றம் சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக ஆதாரங்களோடு தொடர்ந்து எழுப்பிய கேள்விகளுக்குத். தேர்தல் ஆணையம் இதுவரை உரிய பதிலை அளிக்கவில்லை என, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்ற பெயரில் பீகாரைப் போலத் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டம் ஏதேனும், செயல்படுத்த பாஜக அரசு முயன்றால், அதற்கு எதிராக, முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு ஒன்று சேர்ந்து போராடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டு மக்களை நேர் நின்று வீழ்த்த முடியாத எதிரிகளும் துரோகிகளும் குறுக்கு வழியைக் கையாண்டு வென்றிடலாம் எனப் பகல் கனவு காண்கிறார்கள். அதற்குத் தமிழர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றும் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
கள ஆய்வு மேற்கொள்ளப்படாமலேயே நமது வாக்காளர்களை நீக்கவும் வெளி வாக்காளர்களைச் சேர்க்கவும் முயற்சிகள் நடக்கலாம். இந்தச் சதியைத் தமிழ்நாடு ஒன்று திரண்டு போராடும் என்றும் அவர் கூறியுள்ளார்.