விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த செல்லப்பிராட்டை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு லலிதா செல்வாம்பிகை திருக்கோயிலில் நவராத்திரி விழா நடைபெற்று வந்த நிலையில்
நவராத்திரி நிறைவு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
விஜயதசமி ஆனா நேற்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பல மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
~
தொடர்ந்து சிவாச்சாரியார்களால் வேள்வி நடத்தப்பட்டது
பல்வோறு மலர்கள் ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்து
அம்மனை வழிப்படனர் .
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


















