மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பூம்புகார் MLA நிவேதா முருகன் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். முகாமில், ஒரே இடத்தில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், இருதயம், நுரையீரல், எலும்பியல், நரம்பியல், தோல் மருத்துவம், கண், பல் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து மருத்துவ சேவைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை, தூய்மை பணியாளர்களுக்கான அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை போன்றவைகள் பெறுவதற்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

















