ஒரு நபருக்கு 57 ரூபாய் தான் ஜிஎஸ்டி வரி குறைப்பால் லாபம் கிடைக்கப் போகிறது இதுதான் தீபாவளி தள்ளுபடியா? இதற்கு இவ்வளவு சீன் போடுகிறார் மோடி எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி;
எடப்பாடிக்கு வரும் கூட்டம் கொடுத்து கூட்டி வரும் கூட்டம் அந்த வாக்குகள் தவெக்காவுக்கு செல்ல துவங்கி விட்டது-தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரை பற்றி எடப்பாடி பேசியதை வன்மையாக கண்டிக்கிறோம் அரசியல் நாகரீகமற்ற செயல் எம்பி மாணிக்கம் தாகூர் கண்டனம்..
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்திய அரசு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மத்திய தகவல் தொடர்பு மண்டல அலுவலகம் சார்பில் அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் தேசிய ஊட்டச்சத்து மாதம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தலைமை உரை வழங்கி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அவர் கூறுகையில்:
ஜிஎஸ்டி வரி குறைப்பால் நடுத்தர ஏழை மக்கள் 22 ஆம் தேதி முதல் சேமிப்பை தொடங்கி விட்டார்கள் என மோடி பேசியது குறித்து கேள்வி:
எட்டு வருடங்களில் 127 லட்ச கோடி ரூபாய் மக்களிடமிருந்து வாரியாக புடிங்கிருக்கிறார்கள் இதில் 80 லட்சம் கோடி ரூபாய் 50 சதவீதம் ஏழை மக்களிடமிருந்து பிடுங்கிய பணம். 8 வருடத்திற்கு பிறகு மோடி 2 லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ஜிஎஸ்டி வரி மூலம் பலன் கிடைக்கப்போகிறது என்று சொல்கிறார். 2லட்சம் கோடி ரூபாயை 140 கோடி நபருக்கு வகுத்தோம் என்றால் ஒரு நபருக்கு ஜிஎஸ்டியால் வரக்கூடிய லாபம் 57 ரூபாய் அதுதான் இவருடைய தீபாவளி டிஸ்கவுன்ட் 57 டிஸ்கவுண்டுக்கு இவ்வளவு சீன் போடுறாரு பிரதமர். மக்களை பொறுத்த வரைக்கும் வேலையில்லாத,பணப்புழக்கம் இல்லாத தீபாவளியாக மாறி உள்ளது.
ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட பின்னும் ஆவின் பால் விலையை தமிழக அரசு குறைக்கவில்லை என பாஜகவினர் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு:
திமுக ஆட்சியில் பால்விலை கட்டுப்பாட்டில் உள்ளது என பால்வளத் துறை அமைச்சர் சொல்லியிருக்கிறார் அவர்கள் சொன்ன கேள்வியும் இவர்கள் சொன்ன பதிலையும் அப்படியே ஏற்றுக்கொள்வோம்.
செந்தில் பாலாஜி பதிவும் எம்பி ஜோதிமணியின் கண்டனம் குறித்த கேள்விக்கு:
நானும் பார்த்தேன் இரண்டு நாட்களுக்கு முன்பே அந்த பதிவை நீக்கப்பட்டுள்ளது மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம் சுமுகமாக தீர்க்கப்பட வேண்டியது விஷயம் பொதுவெளியில் வந்திருப்பது வருத்தத்துக்குரியது நீக்கப்பட்ட பிறகு அதை பற்றி பேச வேண்டியது இல்லை கூட்டணியில் இருக்கிறோம் பதிவை நீக்கிய பின் இந்த பிரச்சனை முடிந்து விட்டது என்று நினைக்கிறேன்.
பீகார் முதல்வர் நிதீஷ் குமார் நாளை மகளிர்க்கு பத்தாயிரம் வழங்கும் திட்டத்தில் தொடங்குவது குறித்த கேள்வி:
இருபது வருடமாக நிதீஷ் குமார் ஆட்சி இருக்கிறது இதுவரை 10 ரூபாய் கூட பெண்களுக்கு கொடுக்காத நிதிஷ்குமார் தேர்தல் நெருங்குவதால் பத்தாயிரம் ரூபாய் டிரான்ஸ்பர் பண்ணி தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று நினைப்பது திருட்டுத்தனத்தின் உச்சம் எப்படி ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்களோ அதே போல் அரசாங்க பணத்தை கொடுத்து ஓட்டு போட சொல்வது போல் உள்ளது தேர்தல் கமிஷன் இதை தடை விதிக்க வேண்டும்.
தமிழக தேர்தல் களத்தில் அதிமுக தான் முதலிடத்தில் உள்ளது இரண்டாவது இடத்துக்கு தான் மற்ற கட்சிகள் போட்டி போடுகின்றது என எடப்பாடி பழனிச்சாமி பேசியது குறித்த கேள்வி:
அண்ணன் எடப்பாடி டெல்லியில் அமித்ஷாவை பார்த்து காலில் விழுந்து முகத்தை மறைத்து வந்தது அவர் முகத்தை மூடி வந்த கதை எங்களுக்கு தெரியும் வெற்றி பெறுவோம் என்பது கட்சிக்காரர்களை சந்தோஷப்படுத்துவதற்காக சொல்கிறார். கொடுத்து கூட்டி வந்த கூட்டம் அந்த கூட்டத்தின் வாக்கு எல்லாம் தவெகாவக்கு செல்ல துவங்கி இருக்கிறது. அது அவருக்கும் தெரியும் பாஜகவுக்கும் தெரியும் பாஜகவை பொறுத்தவரை எடப்பாடியை எந்த அளவுக்கு அசிங்கப்படுத்த சிறுமைப்படுத்தி அவரின் அனைத்து மரியாதையும் கெடுத்தது அமித்ஷா தான்.
விஜயை கடுமையாக விமர்சித்த நிலையில் சீமான் என் தம்பியை விமர்சிக்கிறேன் என்று கூறிய குறித்த கேள்விக்கு:
சொல்லிட்டாரா அண்ணன் சீமான் எப்போ வேண்டுமானால் என்ன வேண்டுமானாலும் கேட்பார் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு சீமானைப் பொறுத்த வரைக்கும் இன்னைக்கு பேசுவது நிலையில்லாமலும் நாளைக்கு பேசுவது புதுமையானதாகவும் இருக்கும் அவர் பேசுவதை சீரியஸ் ஆக எடுத்துக்க வேணாம் காமெடியாக எடுத்துக் கொள்வோம்.
எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பற்றி உபயோகித்த வார்த்தைகள் மிகவும் கண்டிக்கத்தக்கது தனிப்பட்ட முறையில் அவரைப் பற்றி பேசி இருப்பது அரசியல் நாகரிகமற்ற செயல் அவரிடம் இருந்து இப்படிப்பட்ட வார்த்தையை எதிர்பார்க்கவில்லை அதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
விஜய்க்கு ஸ்கிரிப்ட் சரியாக எழுதிக் கொடுக்கவில்லை என எதிர்க்கட்சியினர் கூறி வருவது குறித்த கேள்விக்கு:
என்னைப் பொறுத்தவரை அதை நான் நம்பவில்லை பாசிச பாஜக என்று விஜய் சொல்கிறார் அதை நான் நம்புகிறேன் திமுகவை திட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாது அது அவருடைய நிலை உங்களைப் பொறுத்தவரை அவர் பாஜகவால் செயல்படுத்தப்படுகிறார் என்பது தவறானது அவர் பாசிச பாஜக என்று கடுமையாக விமர்சிக்கிறார் அந்த திராணி அதிமுகவினர் யாருக்கும் கிடையாது பாஜகவுக்கு எதிர்ப்பாளராக இருக்கிறார் திமுகவை எதிர்ப்பது வருத்தத்துக்குரிய விஷயம் அவர் திமுகவை எதிர்க்க வேண்டியது இல்லை என்றார்.

















