- ஒரு மோதலை விரைவில் எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என்பது குறித்து உலக நாடுகள் இந்தியாவிடம் பாடம் கற்க வேண்டும், என விமானப்படை தளபதி ஏபி சிங் கூறியுள்ளார்.
- ஜிஎஸ்டி சீரமைப்பு மூலம் மக்களின் கைகளில் ரூ.2 லட்சம் கோடி இருக்கும், என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
- டில்லி பல்கலை. மாணவர் சங்க தேர்தலில் ஏபிவிபி பெற்ற வெற்றியானது, தேசமே முதன்மையானது என இளைஞர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையின் பிரதிபலிப்பு என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார்.
- பயங்கரவாதிகளுக்கும், பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவத்துக்கும் உள்ள தொடர்பை உலகம் அறியும். ஆப்பரேஷன் சிந்துாரில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி வெளியிட்ட வீடியோ அதனை தெளிவுபடுத்துகிறது, என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
- விண்வெளி ஆய்வை பொறுத்தவரை இது நமக்கு ஒரு பொற்காலம் என்று இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா தெரிவித்தார்.
- தேர்தலில் போட்டியிடாத, தேர்தல் கணக்கை தாக்கல் செய்யாத 474 அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 42 அரசியல் கட்சிகளும் அடங்கும்.
- தவெக தொண்டர்கள் என்னை பின் தொடர வேண்டாம், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது மரம் ஏற வேண்டாம் என்று தவெக தலைவர் நடிகர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.
- பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் மோடி, பிரிட்டன் மன்னர் சார்லஸ் பிறந்த நாள் பரிசாக அளித்த மரக்கன்றை நடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகினது.
- ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியா நமது நாட்டின் வலிமையை பதிலடி மூலம் எதிரிக்கு காட்டியது என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
- இந்தியாவின் ஜனநாயகத்தை ராகுல் துஷ்பிரயோகம் செய்கிறார். அவரை நாட்டு மக்கள் நம்பமாட்டார்கள் என பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.
















