திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த கணியாம் பூண்டி, முருகம்பாளையம் பகுதியில் HONC GAS என்ற பெயரில் புதிய எரிபொருள் தயாரிப்பு நிறுவனம் துவக்கப்பட்டுள்ளது. இதன் நிர்வாக இயக்குனர் நடிகர் சரத்குமார் குறைந்த செலவில் ஹைட்ரஜன் கேஸ் தயாரிக்கும் உபகரணங்களை அறிமுகம் செய்தார். சேலம் மாவட்டம் பேளூரை சேர்ந்த ராமலிங்கம் கார்த்திக் என்பவர் இந்த உபகரணங்களை கண்டறிந்துள்ளார்.
இவர் கண்டறிந்துள்ள இயந்திரத்தில் 1 லிட்டர் தண்ணீர் ஊற்றினால் சாதாரண பேட்டரி மின்சாரம் மூலம் ஒரு மாதத்திற்கு தேவையான வீட்டு எரிவாயுவை பெற முடியும் எனவும். பாதுகாப்பான முறையில் இந்த ஹைட்ரஜன் கேஸ் இருப்பதால் இதனை வீடு, கடைகள், பெருநிறுவனங்கள், இரும்பு உருக்காலை கள், என நெருப்பு ஆற்றல் பயன்பாடு உள்ள அனைத்து இடங்களிலும் பயன்படுத்த முடியும் எனவும் வாகனங்களை கூட இயக்க முடியும் என தெரிவித்தனர்.
இந்த கண்டுபிடிப்பு தொடர்பாக அனுமதி கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்து உள்ளதாகவும் அடுத்த 10 நாட்களில் உரிய அனுமதி கிடைத்த உடன் பெரிய அளவில் உற்பத்தி செய்து விற்பனைக்கு கொண்டு வர வாய்ப்பு உள்ளதாகவும் உலக அளவில் பெரிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது எனவும் இந்த இயந்திரம் மூலம் ஹைட்டரனை எரித்து ஆக்ஸிஜன் வெளியிடப்படுவதால் உலக வெப்பமயமாதல் பெரிதும் தவிர்க்கப்படும், அதே போல் எரியூட்டப்படும் விறகுகள் தேவையும் குறையும் என்பதால் மரங்கள் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.