October 3, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஆந்திர வனப்பகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு : பகீர் தகவல்கள் வெளிச்சம் !

by Priscilla
September 18, 2025
in News
A A
0
ஆந்திர வனப்பகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு : பகீர் தகவல்கள் வெளிச்சம் !
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

ஆந்திரப் பிரதேசம் திருப்பதி அருகே உள்ள மூலவங்கா வனப்பகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நால்வர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வனப்பகுதியில் துர்நாற்றம் வீசியதை கவனித்த உள்ளூர் மக்கள், அங்கு தேடிப்பார்த்தபோது இரண்டு சிறுமிகள் உட்பட நால்வர் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தகவல் அளிக்கப்பட்ட பாக்காலா போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலங்களை கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

போலீசார் விசாரணையில், உயிரிழந்தவர்கள் தமிழ்நாடு நாகப்பட்டினம் மாவட்டம் பாகொந்தொகை கிராமத்தைச் சேர்ந்த ஜெயமாலா, அவரது மகள்கள் தர்ஷினி, ஹர்ஷினி மற்றும் உறவினர் கலைச்செல்வம் என தெரியவந்தது. ஜெயமாலாவின் கணவர் வெங்கடேஷ் குவைத்தில் வேலை செய்து வந்தவர். சம்பாதித்த பணத்தை மனைவிக்கு அனுப்பி வந்த அவர், சமீபத்தில் ஊர் திரும்பியபோது, அந்தப் பணம் தொடர்பாக கணவர்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், ஜெயமாலா தனது உறவினர் கலைச்செல்வன் மூலம் அந்தப் பணத்தை வட்டிக்கு கொடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜெயமாலா, தனது குழந்தைகளுடன் காணாமல் போன நிலையில், தற்போது வனப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

மரணம் குறித்து மர்மம் நிலவுகிறது. ஜெயமாலா மற்றும் கலைச்செல்வம் ஆகியோரின் முகத்தில் துணியால் மூடி, பிளாஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது போலீசாரின் சந்தேகத்தை அதிகரித்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்து மருந்து பாட்டில்கள் உள்ளிட்ட சில பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் பல்வேறு திசைகளில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: 4 PEOPLES DEADBODIESandhra pradeshforesttamil naduTAMIL PEOPLES
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“அந்த புத்தி மழுங்கிய கட்சிக் கூட்டங்களுக்கு நான் செல்ல மாட்டேன்” – சத்யராஜின் உரை பரபரப்பு

Next Post

தனியார் கல்லூரி சுயநிதி பிரிவு பேராசிரியர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்

Related Posts

பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்
News

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

September 30, 2026

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

September 30, 2026
Next Post

தனியார் கல்லூரி சுயநிதி பிரிவு பேராசிரியர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு : திமுக சார்பில் விஜய் மீது போலீசில் புகார்

September 29, 2025
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

குமரி பேரூராட்சிகளில் அடிப்படைவளர்ச்சி பணி மேற்கொள்ள அனுமதி மறுக்கப்படுவதாககூறி உள்ளிருப்பு போராட்டம்

September 29, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும்திட்டத்தில்,அரசுபொறுப்பிலும்இல்லாதTVKகோபிநாத் திட்டத்தைதுவக்கிய காட்சி

September 28, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

September 22, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

September 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.