சென்னை பெரம்பூர் செங்கை சிவம் பாலம் அருகே அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பு
சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு நபர்களை பிடிக்க முயன்ற போது போலீசருக்கு அடி உதை ஆபாச பேச்சால் பரபரப்பு
காவல் நிலையத்தில் கண்ணாடி உடைப்பு காவலர் மீது தாக்குதல் ஈடுபட்ட இரண்டு பேரிடமும் போலீசார் விசாரணை நடத்து வருகின்றனர்
சென்னை அண்ணாநகர் ஏழாவது நிழற்சாலை பகுதியில் அரை எடுத்து தங்கி தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் மென் பொருள் துறை சார்ந்த படிப்பினை படித்து வரும் நபர்கள் லட்சுமி நாராயணன் (21) கபிலன் (24) தாமஸ் ஆல்வா எடிசன் (23) ஆகிய மூவரும் சென்னை புளியந்தோப்பு பகுதியில் இரவு நேரத்தில்
கிடைக்கும் பிரியாணி
சாப்பிடுவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்
பெரம்பூர் செங்கை சிவம் பாலம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள்டியோ பைக்கில் வந்து மூன்று நபர்கள் சென்ற வாகனத்தை மடக்கி கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்றுள்ளனர்
இதனை அடுத்து அருகே இருந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினரு க்கு அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த புளியந்தோப்பு காவல் நிலைய போலீசார் சம்பவம் குறித்து தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் அவரது நண்பர்களிடம் கேட்டறிந்தனர் பின்பு சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள ஆல்பா பிரியாணி கடை அருகே சென்ற பொழுது அங்கு சந்தேகத்திற்கு இடமான நிலையில் நின்று கொண் டிருந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
பின்பு அந்த இரண்டு நபர்கள் தான் தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் அவர்களது நண்பர்களிடம் செல்போ னை பறித்துக் கொண்டு சென்றது உறுதியான நிலையில் அவர்களை காவல் நிலையம் விசார ணைக்காக போலீசார் அழைத்தபோது பொழுது போலீஸ் உடன் வாக்குவா தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் காவல் துறையினரை ஆபாசமாக பேசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் அப்பொழுது அங்கிருந்த ஐயப்பன் என்கிற காவலர் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாக்கியதில் அவருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளது அவரது சீருடை கிழிந்துள்ளது.
ஒரு வழியாக போலீசார் ரகலையில் ஈடுபட்ட இரண்டு நபர்களையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
விசாரணையில் அவர்கள் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஹர்ஷத் (21) சல்மான் பாஷா (23) என்பது தெரியவந்தது
இதனுடைய இந்த இரண்டு நபர்களும் காவல் நிலையத்திலும் ரகலையில் ஈடுபட்டுள்ளனர் போலீசாரை ஆபாசமாக பேசி தாக்குதல் நடத்தியுள்ளனர் காவல் ஆய்வாளர் அறையில் இருந்த கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டு நபர்களையும் போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்து அவர்கள் கையில் காவல் நிலையத் தில் லாக்கப்பில் அடைத்து வைத்தனர்.
பாதிக்கப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசன் அவரது நண்பர்களிடம் வழிப்பறி மூலம் பறித்த மூன்று செல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர் வழி ப்பறி செய்வதற்கு பயன் படுத்திய டியோ பைக்கை யும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரகளையில் ஈடுபட்ட இரண்டு நபர்களையும் போலீசார் சிறையில் அடைக்க சட்ட நடவடிக்கை கள் எடுத்து வருகின்றனர்.
போலீசார் உடன் நகலில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் குறித்தான வீடியோ இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
இந்த சம்பவத்தால் புளியந்தோப்பு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.















