சமூக நல்லிணக்கத்திற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய பெரும் தலைவர் இமானுவேல் சேகரனாரின் 68-வது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சமூக சமத்துவத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூரும் வகையில், வத்தலக்குண்டுவில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இமானுவேல் சேகரனாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. வத்தலக்குண்டு பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த குருபூஜைக்கு திண்டுக்கல் பாஜக மாவட்ட கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். அவர் கூறும் போது இமானுவேல் சேகரனாரின் நினைவு நாள், வெறுமனே ஒரு அஞ்சலி நிகழ்வு மட்டுமல்ல; அது சமூக விடுதலைக்காக அவர் கண்ட கனவுகளை நாம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது. சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் சமமாக வாழும் ஒரு சமுதாயத்தை உருவாக்குவதே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். அவரது கொள்கைகளை நாம் போற்றி, சமூக நல்லிணக்கத்தை நிலைநிறுத்த உறுதியேற்போம். என தெரிவித்தார். குருபூஜையில் பாஜக கிழக்கு மாவட்ட பொருளாளர் கருப்புச்சாமி முன்னிலை வகித்தார். வத்தலக்குண்டு கிழக்கு ஒன்றியதலைவர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர் வீரபுத்திரன், முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் கோவிந்தராஜ், தெற்கு ஒன்றிய செயலாளர் காமாட்சி, பாரதீய மஸ்தூர் அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க திண்டுக்கல் மண்டல தலைவர் செல்வம், பொதுச்செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் குமார், மாவட்ட அமைப்பு செயலாளர் பாண்டி. மாவட்ட துணைத்தலைவர் முத்துராஜா, ஒன்றிய செயலாளர் சதீஸ்குமார், கிளைச்செயலாளர் சின்னச்சாமி, இளைஞரணி சிவபாலன், கணேசன், மாவட்ட பொதுக்குழு சீனிவாசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் முத்துராமன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஒன்றிய செயலாளர் வீரபுத்திரன் நன்றி கூறினார்.

















