உடலில் அழுக்கு சட்டைகள் நெகிழிப்பைகள் வெட்டி எடுத்து எடுக்க வந்த அழுக்கு துணிகள் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவரை முடிந்திருக்கும் செய்து தூய்மைப்படுத்தி புதிய ஆடை வழங்கி புதிய மனிதராக மாற்றிய தருணம் சமூக சேவகர் பெரம்பூர் பாரதிமோகன் செயல் குறித்து செய்தி ஊடகங்களில் வெளியானது.
இதனைப் பார்த்த குடும்பத்தினர் வந்து அந்த முதியவரை குடும்பத்தாருடன் அழைத்து சென்றனர். முதியவரின் சட்டைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணங்கள் அனைத்தும் குடும்பத்திடம் ஒப்படைத்த நெகிழ்ச்சி தருணம் காவல் நிலையத்தில் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சமூக சேவகர் பாரதிமோகன் இவர் பாரதி மோகன் அறக்கட்டளை எனத் தொடங்கி நாள் தோறும் தனது ஏழ்மை நிலையிலும் பல்வேறு சேவைகளை செய்து வருகிறார் குறிப்பாக சாலைகளில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு முடி திருத்தம் செய்து குளிக்க வைத்து புதிய ஆடை வழங்கி குடும்பத்துடன் சேர்த்து வருகிறார் அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோயம்புத்தூர் பைபாஸ் சாலையில் சுற்றித்திரிந்த முதியவர் ஒருவர் துர்நாற்றத்துடன் ஏராளமான அழுக்கு சட்டைகளை போட்டுக்கொண்டு நெகிழிப் பைகளை மாட்டிக்கொண்டு திரிவதாக தகவல் வந்ததையடுத்து அங்கு சென்ற பாரதி மோகன் அந்த முதியவரை பிடித்து அவருக்கு அவர் அணிந்திருந்த அனைத்து அழுக்கு சட்டைகளையும் வெட்டி எடுத்து நெகிழிப்பை வெட்டி எடுத்து முடி திருத்தம் செய்து தூய்மைப்படுத்தி புதிய ஆடை வழங்கினார். மேலும் அவரை பாதுகாத்து வந்த நிலையில் இந்த நிலைகுறித்து பல்வேறு செய்தி ஊடங்குகளில் செய்தி வெளியானது. செய்தி வெளியான சில நாட்களிலேயே செய்தியை பார்த்து அந்த முதியவரின் குடும்பத்தினர் பாரதி மோகனை தொடர்பு கொண்டு முதியவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதன் பெயரில் இன்று கோயம்புத்தூர் கேஜி சாவடி காவல் நிலையத்தில் வைத்து அந்த முதியவர் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டார் மேலும் அவரை தூய்மைப்படுத்திய போது உடல் முழுவதும் வைத்திருந்த பணத்தை பாதுகாத்து வந்த பாரதி மோகன் அந்த பணத்தையும் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார் மேலும் அந்த முதியவருக்கு பல்வேறு ஆலோசனைகளை போலீசார் வழங்கினர் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர் நெகிழ்ச்சி தருணமாக அமைந்தது. மேலும் தங்களுக்கு உதவிய சமூக சேவகர் பாரதி மோகனுக்கும் செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கும் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
