டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் எல்லாரும் ஒன்றிணைய வேண்டும் இயக்கம் வலிமை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கருத்துக்களை முன் வைத்ததாகவும் , தொடர்ந்து மக்கள் பணி ஆற்றுவேன் என கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழலில் ஹரித்துவார் செல்வதாக கூறிவிட்டு சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்திற்கு திரும்பிய நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ஹரித்துவார் செல்வதாக கூறிவிட்டு சென்ற நிலையில் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்த அவர் எல்லாரும் ஒன்றிணை வேண்டும் என்று நோக்கத்தோடும் இயக்கம் வலிமை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு கருத்துக்களை அவரிடத்தில் முன் வைத்ததாக தெரிவித்த செங்கோட்டையன். கருத்துக்கள் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும், அரசியலில் உள்ளவர்கள் ஜனநாயக முறைப்படி சுதந்திரமாக தங்களுக்கு விருப்பமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் இது வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டார்.
மேலும் ரயில்வே துறை அமைச்சரின் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த போது ஏற்காடு எக்ஸ்பிரஸ் முன் கூட்டியே சென்னை செல்வதால் மக்கள் பாதிக்கபடுவதாக தெரிவித்தேன் உடனடியாக பரிசீலிப்பதாக அமைச்சர் தெரிவித்தார். இது போன்ற மக்கள் பணியை தொடர்ந்து ஆற்றுவேன் என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.
















