தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செல்கின்றார். இந்த நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், செங்கோட்டையன் டெல்லிக்கு போனால் நான் எப்படி பதில் சொல்ல முடியும். ராமர் கோவில், ரிஷிகேஷ் போவதாக கூறி இருக்கின்றார். உங்களுக்குத் தெரிந்த மாதிரி தான் எனக்கும் தெரியும். அவர் எங்கே போய் இருக்கின்றார் என்று எனக்கு தெரியாது.
காங்கிரஸ் கட்சி இந்தியாவில் ஆட்சி செய்யும் போது 90 தடவை ஆட்சியை கலைத்து இருக்கின்றார்கள். காங்கிரஸ் கட்சியின் வழக்கம் அது, எங்கள் கட்சி அது அல்ல. கூட்டணி வளர்ப்பது எங்கள் நோக்கம்.
ஏற்கனவே நாட்டில் இருக்கும் கம்பெனிகளை தான் சேர்த்துக் கொண்டு வந்து இருக்கின்றார். வெள்ளை அறிக்கை போன தடவை நாங்கள் கேட்டு இருந்தோம். ஆனால் சும்மா ஒரு பதிவை மட்டும் போட்டு இருக்கிறார். பெரிதாக ஒன்றும் கொண்டு வரவில்லை.
2021, 2019, 2016 இது எல்லாம் பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை. அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். ஏற்கனவே தமிழக பாஜக கட்சி சார்பாக எல்லாரும் ஒன்று சேர வேண்டும் என்று பேசி இருக்கின்றேன். தேவைப்பட்டால், அழைத்தால் நானே பேச இருக்கின்றேன். அவ்வளவுதான், தேவைப்பட்டால் கண்டிப்பாக நானே அழைப்பு கொடுப்பேன்.
தேர்தல் அறிக்கைகளில் தமிழகம் முழுவதும் துப்புரவு பணியாளர்கள் வேலை செய்கின்றார்களோ அவர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார்கள். துப்புரவு பணியாளர்கள் அதைத்தான் கேட்கின்றார்கள்.. தொடர்ந்து சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார்கள். உண்ணாவிரதம் இருந்த இடத்தை மாற்றினார்கள்.. மதுரையில் போராட்டம் நடத்தினார்கள். இந்த அரசாங்கம் போராடுபவர்களை அவர்களை கேள்வி கேட்பவர்களை நசுக்கும் அரசாங்கமாக இருக்கின்றது. பாஜக சிறுபான்மை அணி வேலூர் இப்ராஹிம் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்து நேற்று சிறையில் அடைத்துள்ளார்கள்.
தமிழ்நாட்டில் வெடிகுண்டு மிரட்டல் மட்டுமல்ல எல்லா மிரட்டல்களும் நடக்கிறது. ஆளுங்கட்சி தரப்பில் எல்லாம் மிரட்டல்கள் நடக்கின்றது. குடியரசு துணை தலைவர் தேர்தல் நிச்சயமாக தமிழகத்தை சேர்ந்த ஒரு தமிழர் மகாராஷ்டிரா கவர்னராக இருக்கக்கூடிய சிபி ராதாகிருஷ்ணன் உறுதியாக மாலை வெற்றி பெறுவார்.
செங்கோட்டையன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு பற்றி எனக்கு தகவல் வரவில்லை. அதிமுக கூட்டணியில் நாங்கள் உள்ளோம். அதிமுக பொதுச் செயலாளர் ஒரு முடிவு எடுத்து இருக்கின்றார். கட்சியில் இருந்து உத்தரவு விட்டு இருக்கின்றார்கள். எங்களைப் பொறுத்த அளவிற்கு ஒன்று சேர வேண்டும் என்பதுதான். அதிமுகவில் இருந்து நீக்கியவர்களை நாங்கள் போய் சந்திக்க முடியாது.
டெல்லிக்கு 11ந் தேதி செல்கின்றேன். அவர் எங்கே இருக்கின்றார் என்று செங்கோட்டையனை கேட்டு சொல்லுங்கள் அதன் பின்பு அவரை சந்திக்கலாம். திமுக அரசாங்கம் தூண்டுதலின் பெயரில் அனைத்து வேலைகளும் செய்கிறது. எல்லா பின்னணிக்கும் காரணம் திமுக அரசாங்கம் தான் என்றார்.

















