2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தனது கட்சியை பலப்படுத்தும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். அரசியலுக்கு முழுமையாக கவனம் செலுத்த உள்ளதால், தற்போது அவர் நடித்து வரும் ஜனநாயகன் படம் அவரது கடைசி சினிமா படமாகும்.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் நடிகை த்ரிஷாவிடம் விஜய்யின் புகைப்படம் காட்டப்பட்டது. அப்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இதனை தொடர்ந்து பேசிய த்ரிஷா,
“விஜய்யின் புதிய பயணத்திற்கு என் வாழ்த்துகள். அவரது கனவுகள் எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் நிறைவேறட்டும். ஏனெனில், அவர் அதற்குத் தகுதியானவர்” எனக் கூறினார்.
இந்த தருணத்தில் நிகழ்ச்சியில் இருந்த கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் ஆகியோர் புன்னகைத்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திரையுலகில் விஜய் – த்ரிஷா ஜோடி கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி, லியோ போன்ற பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். மேலும் சமீபத்தில் வெளியான கோட் படத்தில் “மட்ட” பாடலுக்கு த்ரிஷா சிறப்பு நடனத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
 
			















