- அமெரிக்க வரி விதிப்பு தொடர்பாக, பிரேசில் அதிபர் லுலா டா சில்வா தலைமையில் நடக்கும் ‘பிரிக்ஸ்’ அமைப்பின் உச்சி மாநாட்டில், நம் வெளி யுறவு அமைச்சர் ஜெய் சங்கர் பங்கேற்கிறார்.
- அமெரிக்க அதிபர் மாளிகையில் அந்நாட்டின் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு இரவு விருந்து வைத்த அதிபர் டிரம்ப், ‘அமெரிக்காவில் எவ்வளவு முதலீடு செய்வீர்கள்’ என, அவர்களிடம் நேரடியாக கேள்வி எழுப்பியதால் சங்கடமான சூழல் நிலவியது.
- தேனி மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பற்றி பேசுவதை முற்றிலும் தவிர்த்தார்.
- சீனாவுடான எல்லை பிரச்னை என்பது நமக்கு மிகப் பெரும் சவால் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் கூறி உள்ளார்.
- இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும், என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
- ஆந்திராவின் தொழில்நுட்ப எதிர்காலத்திற்கான கொள்கைகளை அறிவித்துள்ள அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, திருப்பதி அருகே விண்வெளி நகரம் அமைக்கப்பட்டு தனியார் செயற்கைக்கோள்கள் அங்கிருந்து விண்ணில் செலுத்தப்படும் என்றார்.
- ஆசிரியர் தினத்தில் தேர்தல் வாக்குறுதி எண்-181 ஞாபகம் வருகிறதா என்று முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
- அதிமுகவை ஒரு திராவிட இயக்கம் என்கிற முறையில் விடுதலை சிறுத்தைக்கட்சி பெரிதும் மதிக்கிறது. என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
- செங்கோட்டையன் குரல் கலகக்குரல் இல்லை. செங்கோட்டையன் மீது எந்த தவறும் கிடையாது. என ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்தார்.
- துணை ஜனாதிபதி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவது உறுதி என்று இண்டி கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
 
			














