தூத்துக்குடி வ உ சி 154வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், பாஜகவினருக்கும் இடையே மோதல்.,
போலீசார் அந்த சமயம் அங்கு இல்லாததால் பரபரப்பான சூழ்நிலை.! நடந்தது என்ன.!
சுதந்திர போராட்ட தியாகி வ உ சிதம்பரனார் தியாகங்களை போற்றுவோம் தேச நலனை பாதுகாப்போம் என்ற தலைப்பில் சாதி, மத வேறுபாடு இன்றி மக்கள் ஒற்றுமையாக வாழ்வதே தியாகத்தை போற்றுவதாகவும் எனக்கூறி இந்திய தொழிற்சங்க மையம் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கம் இணைந்து வஉசி 150வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது முழு உருவச்சிலை அமைந்துள்ள தூத்துக்குடி பழைய மாநகராட்சி கட்டிடம் அருகே அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு முறையாக அனுமதி பெற்று சிலை முன்பு வு சிதம்பரனார் தியாகங்களையும் தேச நலனையும் ஒலிபெருக்கி மூலம் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது 50 சதவீத வரிவிதிப்பு சம்பந்தமாக பேசிய மாநில செயலாளர் ரசல் பேசும் போது, இந்திய பொருளாதார இறையாண்மை சீரழிந்து விட்டதாக கூற முன் வரும்போது பாஜக பிரமுகர் சொக்கலிங்கம் என்பவர் மைக்கை பிடுங்கியதால் ஆத்திரத்தில் சிஐடியு தொழிற்சங்கத்தை சார்ந்த ஒரு சிலர் தள்ளிவிட்டு அறைந்ததனர்.
பின்னர், உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்தில் பாஜக மாவட்ட செயலாளர் மற்றும் சசிகலா புஷ்பா ஆகிய பாஜகவினர் ஒன்று கூடியதால் இரு பிரிவினர் இடையே மோதல் சூழும் அபாயம் ஏற்பட்டது. கைகலப்பு நடந்த சமயம் இந்தப் பகுதியில் ஒரு காவலர் கூட இல்லாததால் நீண்ட நேரம் வாக்குவாதமும் கூச்சல் குழப்பமும் ஏற்பட்டது. இதனால் இந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்த நிலையில் சிறிது நேரம் கழித்து சம்பந்தப்பட்ட பகுதியில் போலீசார் உடனடியாக வந்து இரு தரப்பினரையும் விலக்கிவிட்டு சிஐடியு தொழிற்சங்கத்தினரை அங்கிருந்து அப்புறப்படுத்திய பின்பு பாஜகவினர் சிறிது நேரம் முழக்கமிட்டு கலைந்து சென்றனர்.
















