கொழும்பு: இலங்கையின் ஊவா மாகாணம், பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்ததும், 15 பேர் காயமடைந்ததும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பதுளை பகுதியில் 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. தகவல் கிடைத்தவுடன் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த 15 பேரில் 9 பேர் பெண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காயமடைந்த 15 பேர் பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், பேருந்து டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததே விபத்திற்கான காரணம் என தெரியவந்துள்ளது. விபத்து குறித்து போலீசார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.
















