- வரிவிதிப்பு விவகாரத்தில் அமெரிக்க நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் அதிபர் டிரம்ப் மேல்முறையீடு செய்துள்ளார்.
- பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவது அனைத்து நாடுகளின் மனிதாபிமான கடமை என்று நாங்கள் நம்புகிறோம் என சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் உடனான சந்திப்புக்கு பிறகு பிரதமர் மோடி தெரிவித்தார்.
- விஜயவாடாவில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பறவை மோதிய சம்பவத்தை தொடர்ந்து ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
- தமிழகத்தில் வரும் செப்டம்பர் 8, 9ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- சிறந்த ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப்பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. அதேபோல, சிறந்த பல்கலைக்கழகத்திற்கான பட்டியலில் கோவையைச் சேர்ந்த அமிர்தா விஷ்வா வித்யபீதம் 8வது இடத்தை பிடித்துள்ளது.
- சென்னையில் பல்வேறு தொழிலதிபர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு புகாரின் பேரில் சோதனை நடக்கிறது.
- ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
- அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்க்கு எங்கள் மீது உள்ள கரிசனத்திற்கு நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
- சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.80 குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.3,120 அதிகரித்திருந்தது.
- வரலாற்று சிறப்பு மிக்க ஜிஎஸ்டி சீர்திருத்தம் செய்த பிரதமர் மோடிக்கு நன்றி. ஜிஎஸ்டி வரி குறைப்பு மோடி அரசின் தீபாவளி பரிசு என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

















