கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய ஓணப்பண்டிகை
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஓணக்கொண்டாட்டம் இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து அத்தப்பூ கோலமிட்டு மாவேலி மன்னனை மேள தாளத்துடன் வரவேற்று வடம் இழுத்தல் திருவாதிரை நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் செண்டை மேளம் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த கொண்டாட்டத்தின் போது 100 மாணவிகள் இணைந்து ஆடிய திருவாதிரை நடனம் அனைவரையும் கவர்ந்தது.


















