வெளிநாட்டில் இருப்பவர்கள் பாஸ்போர்ட்டை புதுப்பிக்கும் போதும் புதிதாக பாஸ்போர்ட் பெறும்போதும் காவல் நிலைய விசாரணையில் சம்பந்தப்பட்ட நபர் இந்திய பிரஜையா அவர் மீது வழக்குகள் உள்ளதா என்பதை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும் ஆனால் கதவு எண் மாற்றம் தந்தை பெயர் முன்னாள் இருப்பது போன்ற காரணங்களை கூறி விண்ணப்பத்தை ரத்து செய்வதை தடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு.
மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்கின்றனர். இவ்வாறு வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் தங்களது பாஸ்போர்ட்டை புதுப்பிக்கும் போதும் புதிதாக வெளிநாடு செல்பவர்கள் புதிய பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் போதும் விண்ணப்பதாரரின் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களுக்கு இது தொடர்பான விசாரணை அறிக்கை அனுப்பப்படுகிறது. அவர்களின் ஆவணங்களை சரிபார்த்து அவர்கள் இந்திய பிரஜையா? இல்லையா? என்பதும் வழக்கு ஏதேனும் நிலுவையில் இருக்கிறதா? என்பதை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் சம்பந்தப்பட்ட நபரின் முகவரியில் கதவு எண் மாற்றம் தந்தை பெயர் அவரது பெயருக்கு முன்னால் இருப்பது உள்ளிட்ட காரணங்களை கூறி அந்த மனுவினை தள்ளுபடி செய்து காவல் துறையினர் திருப்பி அனுப்புகின்றனர். இதனால் புதிதாக பாஸ்போர்ட் பெறுபவர்களும் வெளிநாடுகளில் பணிபுரிந்து கொண்டு புதுப்பிப்பதவர்களும் கடும் மன உளைச்சலுக்கு துன்பத்திற்கும் ஆளாகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருமங்கலத்தைச் சேர்ந்த சுந்தரேசன் என்பவரின் பாஸ்போர்ட் புதுப்பிப்பதற்காக குத்தாலம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த போது தந்தை பெயர் உண்ணும் விண்ணப்பதாரரின் பெயர் பின்னும் இருந்ததால் அதனை தள்ளுபடி செய்துள்ளனர். பின்னர் மாற்றப்பட்டு திரும்பவும் குத்தாலம் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட பின்னரும் முகவரியில் கதவு எண் மாறி இருப்பதாக கூறி தள்ளுபடி செய்துள்ளார்கள். பாஸ்போர்ட் புதுப்பிக்கும் காலம் ஒரு மாதத்தில் நிறைவடைய இருப்பதால் விண்ணப்பதாரர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார். எனவே மாவட்ட காவல்துறை அலுவலகம் மூலம் அனைத்து காவல் நிலையங்களுக்கும் பாஸ்போர்ட் விசாரணையில் சரிபார்க்க வேண்டிய முறையான வழிகாட்டு நெறிமுறைகளை தெளிவுபடுத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட நபரின் சார்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
