விழுப்புரத்தில் முதல் முறையாக நடைபெற்ற மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் மாணவர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டு திறனை வெளிப்படுத்தினர்.
விழுப்புரம் அருகேயுள்ள சாலமேடு பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் முதல் முறையாக ஜூனியர் மற்றும் சீனியர் அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி,கடலூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த 50 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முதல் ஐந்து இடங்களில் தகுதி பெற்றவர்கள் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தகுதி பெறுகின்றனர். துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்கு சென்னை மற்றும் திருச்சி செல்ல வேண்டிய சூழல் உள்ள நிலையில் விழுப்புரத்தில் அமைந்துள்ள பயிற்சி மையத்தில் ஆர்வத்தோடு பள்ளி மானவர்கள் பயிற்சி பெற்று துப்பாக்கு சுடுதல் போட்டியில் பங்கேற்றனர். துப்பாக்கி சுடுதல் போட்டியில் 30 முறை சுடுதலில் மைய வட்டத்திற்குள் குறி பார்த்து சுடுதலில் ஈடுபட்டனர். துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும் என்பது கனவு என தெரிவித்தனர்.
