மயிலாடுதுறை அருகே இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் விசாரணை. காதலித்து திருமணம் செய்த மணைவியை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தி அடித்து கொன்றுவிட்டதாக உறவினர்கள் குற்றசாட்டு:-
மயிலாடுதுறை அருகே மூங்கில்தோட்டம் மாந்தோப்புத்தெருவை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்(27) இவரும் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா வேப்பத்தூர் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் மோனிகா(25) என்பவரை காதலித்து வந்ததற்கு பெண்ணின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திருவிடைமருதூர் காவல்நிலைய போலீசார் அறிவுறுத்தலின்படி கடந்த 2021ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டுள்ளனர். இவர்களுக்கு மித்ரன்(3) ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. நேற்று 5 ஆயிரம் பணம் கடன் வாங்கியது தொடர்பாக குடும்பத்தில் சண்டை நடந்ததாக மோனிகா தனது தாயார் கஸ்தூரியிடம் போனில் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பிறகு மோனிகா தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டதாக கணவர் வீட்டார் போனில் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெண்விட்டார் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மோனிஷாவின் உடலை கைப்பற்றி மயிலாடுதுறையில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேதபிரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி 4 ஆண்டுகள் ஆவதால் மயிலாடுதுறை கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா விசாரணை மேற்கொண்டார். மனைவி செல்போனை எடுத்து தப்பான செய்திகளை மற்றவர்களுக்கு கணவன் ஹரிகிருஷ்ணன் அனுப்புவதாகவும், ஹரிகிருஷ்ணனுக்கு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டினர். நாத்தனார் ரம்யா, ரம்யாவின் கணவர் மாரியப்பன் இருவரும் கணவன்-மனைவி பிரச்சனையில் தலையிட்டு மோனிகாவை அசிங்கமாக பேசி சித்ரவதை செய்ததாகவும், கடந்த வாரம் தங்கள் மகளை ரோட்டில்விட்டு அடித்ததாகவும் அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை கோட்டாட்சியரிடம் முன்வைத்தனர். தங்கள் மகளை அடித்து கொன்றுவிட்டு நாடகமாடுவதாகவும் கணவன் மற்றும் குடும்பத்தாரை கைது செய்ய வேண்டும் என்று கதறி அழுதனர். தங்கள் பேரனை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மகள் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யாவிட்டால் உடலை பெறமாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்., இது குறித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா தனி விசாரணை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் மோனிகா இறப்பிற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும், தங்கள் பேரணை தங்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி மருத்துவமனை முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தையையடுத்து கலைந்து சென்றனர்.