ஸ்ரீ மங்களகரமான விஷ்வாவசு ஆவணி மாதம் 14ஆம் தேதி
ஆகஸ்ட் 30, 2025 சனிக்கிழமை.
நல்ல நேரம்: காலை 10.45 முதல் 11.45
ராகு காலம்: காலை 9.00 முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 முதல் 03.00
குளிகை நேரம்: காலை 6.00 முதல் 7.30
மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்று உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டங்களை அறிந்து கொள்ளுங்கள்.
மேஷ ராசி நேயர்களே!

உங்களுடைய ராசிக்கு ஏழாம் இடத்தில் சந்திர பகவான் இன்று பயணம் செய்கிறார். உங்களுடைய தேவைகளை அறிந்து உங்களுடன் இருப்பவர்கள் இன்று உதவி செய்வார்கள். மேலும் உங்களுடைய உறவினர்கள் உங்களுக்கு நெருக்கமானவர்களின் ஆதரவு உங்களுக்கு இன்று கிடைக்கும். எந்த போட்டியில் கலந்து கொண்டாலும் மன நிறைவுடன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு வேலையில் உள்ள பணி சுமைகள் குறையும்.
- அதிர்ஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
- வழி பட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாக்கும்.
ரிஷப ராசி நேயர்களே!

ராசிக்கு ஆறாம் இடத்தில் சந்திர பகவான் பயணம் செய்கிறார். உங்களுடைய ராசி அதிபதியாக இருக்கும் சுக்கிரன் ஆறாம் இடத்து அதிபதியாக இருந்தாலும் சந்திர பகவான் இக்காலகட்டங்களில் பயணம் செய்யும்போது வேலையில் அக்கறை செலுத்த வேண்டும். மேலும் யாருக்கும் வாக்குறுதிகள் கொடுக்கக் கூடாது. பொருளாதார முன்னேற்றம் உண்டு. நட்பு உறவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. சொந்த தொழில் செய்பவர்கள் இன்று மிக அதிகமான நேரம் தொழிலுக்காக ஒதுக்குவது சிறப்பு.
- அதிர்ஷ்ட எண் : 4
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
- வழி பட வேண்டிய தெய்வம் : காலபைரவர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
மிதுன ராசி நேயர்களே!

மிதுன ராசி அன்பர்களுக்கு சந்திர பகவான் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். கணவன் மனைவிக்குள்ளே நெருக்கம் அதிகரிக்கும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் அதன் மூலமாக மதிப்பு மரியாதை கிடைக்கும். உங்களுடன் பிறந்தவர்கள் உங்களை மிகவும் அனுசரித்து செல்வார்கள். காதல் செய்பவர்களுக்கு மகிழ்ச்சிகள் அதிகரிக்கும்.
- அதிர்ஷ்ட எண் : 4
- அதிர்ஷ்ட நிறம் : பச்சை
- வழிபட வேண்டிய தெய்வம் : நாராயண பெருமாள் கோவில் வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்.
கடக ராசி நேயர்களே!

கடக ராசி அன்பர்களுக்கு சந்திர பகவான் ராசிக்கு நான்காம் இடத்தில் பயணம் செய்கிறார். இன்று எதிர்பாராத சில பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். எதிர்பார்த்த மகிழ்ச்சிகளும் நற்செய்திகளும் உங்களுக்கு கிடைக்கும். உறவினர்கள் வருகையினால் மிகப்பெரிய ஒரு மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகப் போகிறது. வியாபாரம் மற்றும் வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் அலைந்து திரிந்து செயல்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் அதன் மூலமாக மிகப்பெரிய லாபமும் ஏற்படும். மற்றவர்கள் பேச்சை இன்று அதிகம் கேட்க வேண்டாம். உங்களுடைய தேவைக்கான விஷயங்களை மட்டும் செய்து கொள்ளவும்.
- அதிர்ஷ்ட எண் : 7
- அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
- வழி பட வேண்டிய தெய்வம் : இன்று பத்ரகாளியம்மன் வழிபாடு நாளை சிறப்பாகும்.
சிம்ம ராசி நேயர்களே!

சிம்மராசி நண்பர்களே உங்களுடைய ராசிக்கு மூன்றாம் இடத்தில் சந்திர பகவான் பயணம் செய்கிறார். கொஞ்சம் சுறுசுறுப்பாகும் விரைவாக வேலையை முடிக்க முடியும். எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். வீட்டில் சுப காரியங்கள் செயல்பாடுகள் திட்டமிட்டு நிறைவேற்றுவீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவு உண்டு. தொழில்களில் உள்ள போட்டியை தகர்த்தெறிந்து வெற்றி பெறுவீர்கள்.
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
- வழிபட வேண்டிய தெய்வம் : இன்று சிவன் வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்.
கன்னி ராசி நேயர்களே!

கன்னி ராசி நேயர்களுக்கு ராசிக்கு இரண்டாம் இடத்தில் சந்திரன் பயணிக்கிறார். இன்றைய நாளில் வித்தியாசமான சிந்தனைகள் மனதில் அதிகம் உண்டாகும். பொருளாதார ரீதியாக சூழ்நிலைகளில் முன்னேற்றம் உண்டு. உங்களிடம் கடன் பெற்றவர்கள் அல்லது உங்களிடம் பணம் தருகிறேன் என்று கூறியவர்கள் உறுதியாக உங்களைத் தேடி வந்து கொடுப்பதற்கான சூழ்நிலை உருவாகும். கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனை மன அழுத்தத்திலிருந்து வெளியே வருவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் உண்டு. எதிர் பாலினத்தவரிடம் கவனமாக இருக்க வேண்டும் யாருக்கும் வாக்குறுதி கொடுக்கக் கூடாது.
- அதிர்ஷ்ட எண் : 2
- அதிர்ஷ்ட நிறம் : ஊதா
- வழி பட வேண்டிய தெய்வம் : இன்று மாரியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
துலாம் ராசி நேயர்களே!

துலாம் ராசி அன்பர்களுக்கு சந்திர பகவான் ராசியில் பயணிக்கிறார். மனம் ஒருநிலைப்பட முடியாத அளவுக்கு சிந்தனைகள் அதிகமாக சிந்திக்க நேரிடும். ஒரு இடத்திலிருந்து வேலை பார்க்காமல் கொஞ்சம் வெளி சுற்றுவட்டால் சென்று வேலை பணிகளை செய்யும் நபர்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும். முடிந்தளவு தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். விட்டுக் கொடுத்து செல்வது உங்களுக்கு மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் கிடைக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும்.
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
- வழி பட வேண்டிய தெய்வம் : மகாலட்சுமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
விருச்சிக ராசி நேயர்களே!

விருச்சிக ராசி அன்பர்களுக்கு ராசிக்கு 12-ஆம் இடத்தில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலுமே திருப்தியற்ற மனநிலைகள் உருவாவதற்கான வாய்ப்புகள் உண்டு மறதிகள் மூலமாக இந்த பிரச்சனை ஏற்படும். தேவையில்லாத செலவுகள் உண்டாகும். மேலும் புதிய அனுபவங்கள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்ற அதிகமான முயற்சிகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
- அதிர்ஷ்ட எண் : 6
- அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
- வழி பட வேண்டிய தெய்வம் : ஆஞ்சநேயர் பகவான் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாக்கும்.
தனுசு ராசி நேயர்களே!

தனுசு ராசி நேயர்களுக்கு சந்திர பகவான் ராசிக்கு 11 ஆம் இடத்தில் பயணம் செய்யும் காலம் இன்று உங்களுக்கு லாபங்கள் அதிகரிக்கும். உங்களை விட வயது மூத்தவர்களிடம் இருந்து அன்பும் பாசமும் அதிகமாக கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு இரட்டிப்பான லாபங்கள் உருவாகும். பெண்களுக்கு மனமகிழ்ச்சிகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. மாணவர் செல்வங்கள் படிப்பில் வெற்றி பெறுவார்கள். முதன்மையான மாணவனாக பெயரும் புகழும் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. தொலைதூர பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகளும் உண்டு.
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : ஊதா
- வழி பட வேண்டிய தெய்வம் : சிவன் பெருமான் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
மகர ராசி நேயர்களே!

மகர ராசி நேயர்களுக்கு சந்திர பகவான் ராசிக்கு பத்தாம் இடத்தில் பயணம் செய்வதினால் தாங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலுமே ஏதோ முந்திய தொடர்பு ஒரு எண்ணம் இருந்து கொண்டே இருக்கும் தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும் புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு அதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள் இளைஞர்களுக்கு இன்றைய நாளில் புதிய வேலைவாய்ப்புக்கான மாற்றத்திற்குரிய நாள் உங்களுடைய அப்பா வழி உறவிலிருந்து உதவி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்
- அதிர்ஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
- வழி பட வேண்டிய தெய்வம் : பிரம்மசக்தி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
கும்ப ராசி நேயர்களே!

கும்ப ராசி அன்பர்களுக்கு ராசிக்கு 9ஆம் இடத்தில் சந்திர பகவான் பயணம் செய்கிறார். இன்றைய நாளில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலுமே மகிழ்ச்சிகள் அதிகமாக நிறைந்திருக்கும். மேலும் உங்களுடைய குலதெய்வ கோவில் வழிபாடு இன்று செய்வதற்கான பாக்கியம் உருவாகும். உங்களுடைய குலதெய்வத்தின் ஆசிர்வாதம் கிடைக்கும். தேவையில்லாத இடையூறுகள் பிரச்சனைகள் மன அழுத்தங்கள் ஆகியவை விலகி குதூகூலமாக உங்களுடைய அத்தனை விதமான செயல்பாடுகளின் மகிழ்ச்சியுடன் முடிப்பீர்கள் என்று பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு.
- அதிர்ஷ்ட எண் : 1
- அதிர்ஷ்ட நிறம் : பச்சை
- வழி பட வேண்டிய தெய்வம் : குலதெய்வ வழிபாடு இந்த நாளை சிறப்பாக ஆக்கும்.
மீன ராசி நேயர்களே!

மீன ராசி நேயர்களுக்கு ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் பயணம் செய்கிறார் இன்று எடுக்கின்ற ஒவ்வொரு முடிவுகளுமே சிறு குழப்பங்கள் இருந்து கொண்டே இருக்கும். நீங்கள் உங்களுடைய பணியை தவிர்த்து மற்ற விஷயங்களில் அதிகமாக தலையிடக்கூடாது. இன்றைய நாள் உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதினால் உங்களுடைய வீட்டின் அருகில் இருக்கின்ற விநாயகரை வணங்கிய பிறகு உங்களுடைய வேலைகளை நீங்கள் தொடங்க வேண்டும் புதிய முயற்சிகள் செய்வதை தவிர்க்க வேண்டும் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் கவனம் செலுத்த வேண்டும் வண்டி வாகனங்களை செல்லும் போது கவனம் செலுத்த வேண்டும்.
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : ஊதா
- வழி பட வேண்டிய தெய்வம் : மதுரை மீனாட்சி அம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
 
			















