- கட்சிப் பதிவை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்கான காரணத்தை 26ம் தேதி நேரில் ஆஜராகி அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி உள்பட 6 கட்சிகளுக்கு தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
- கிட்னி விற்பனை விவகாரத்தை விசாரிக்க தனி விசாரணைக்குழுவை அமைத்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
- முதல்வரின் காலை உணவு திட்ட விரிவாக்க விழாவில் பங்கேற்பதற்காக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நேற்று தமிழகம் வந்தார்.
- நாங்கள் மதத்தின் அடிப்படையில் கொல்லவில்லை, செயல்களின் அடிப்படையில் தாக்குதல் நடத்தினோம். ஜாதி, மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதில்லை, என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
- விமானப்படையின் முக்கிய சக்தியாக விளங்கி, 60 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்த மிக்-21 போர் விமானங்களின் சேவை, வரும் செப்டம்பர் 26ம் தேதியுடன் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை கைவிட்டால், இஸ்ரேல் ராணுவம் லெபனானில் இருந்து வெளியேறும் என பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்து உள்ளார்.
- ஐஎன்எஸ் உதயகிரி மற்றும் ஐஎன்எஸ் ஹிம்கிரி போர்க்கப்பல்கள் இன்று 26ம் தேதி இந்திய கடற்படையில் இணைக்கப்பட இருக்கிறது. இந்திய பாதுகாப்புத்துறை வரலாற்றில் ஒரே நாளில் இரு போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுவது முதல் முறையாகும்.
- தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உள்பட நாடு முழுவதும் 45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஹிந்துமத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக முதல்வரின் செயல்கள் உள்ளதாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜ மூத்த நிர்வாகி தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
- தனி நபரோ அல்லது கூட்டமாகவோ ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்தினால், 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
















