தேவேந்திரகுல வேளாளர்கள் பட்டியலின சாதி கிடையாது. பட்டியலினத்தில் வெளியே செல்ல இருக்கிறோம். அதற்கு எடப்பாடி முதல்வராக வேண்டும். நரேந்திர மோடியால் மட்டுமே அதை தர முடியும் – ஜான்பாண்டியன்.
திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி தமிழகத்தில் ஒரு நல்ல ஆட்சியை உருவாக்க வேண்டும் பாரத பிரதமர் மோடி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரவேண்டும். – நயினார் நாகேந்திரன்.
பா.ஜ.க எப்போது அதிமுக கூட்டணி வந்ததோ அன்றிலிருந்து முதல்வர் ஸ்டாலின் தூங்கவே இல்லை. ஓடிக் கொண்டிருக்கிறார் அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலினும் ஓடிக் கொண்டிருக்கிறார். அதிமுக தனி பெரும்பான்மையுடன் பா.ஜ.கட்சி கூட்டணியோடு ஆட்சி அமைப்பார்கள் – முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் தேவை. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் போன்றவை நடைபெற்று வருகிறது. வரும் காலம் நம்ம காலமாக இருக்க வேண்டும். – த.மா.கா ஜி கே வாசன்
திண்டுக்கல்லில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநில மாநாடு தோமையார்புரம் பகுதியில் நடைபெற்றது. இதில், தமமுக மாநில தலைவர் ஜான் பாண்டியன் தலைமையில், மாநில பொதுச்செயலாளர் பிரிசில்லா பாண்டியன் முன்னிலையில் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் மாண்புமிகு திண்டுக்கல் சி.சீனிவாசன், மாண்புமிகு நத்தம் ஆர்.விசுவநாதன் அவர்களும் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறன், புரட்சி பாரதம் கட்சி முதன்மை செயலாளர் ருஜேந்திரகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசுகையில் :-
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின் அமையுள்ள ஆட்சி கூட்டணி ஆட்சி தான். கூட்டணி ஆட்சி அமைகின்ற பொழுது நீங்கள் மாநாட்டில் வைத்துள்ள தீர்மானங்கள் அனைத்தையும் செயல் வடிவம் பெறுவதற்கு உற்ற துணையாக இருப்போம் என பகிரங்கமாக அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி ஆட்சி தான் என தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
மாநாட்டில் திண்டுக்கல் எம்.எல்.ஏ சீனிவாசன் பேசுகையில்:-
“SC பட்டியலில் இருந்து வெளியேற வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். 100% நிறைவேற்ற முடியாத நிலை இருக்கிறது. அடுத்த ஆட்சியில் தமிழகத்தில் முதல்வராக வர இருக்கிற எடப்பாடி பழனிச்சாமி நிச்சயமாக இதை செய்வதற்கு நாங்களும் உங்களோடு சேர்ந்து போராடுவோம். நீங்களும் சட்டமன்றத்திற்கு வர போகிறீர்கள் நீங்களும் வாருங்கள். G.K வாசன் அவர்கள் நாடாளுமன்றத்தில் பேசுவார்கள். நானும் நத்தம் விஸ்வநாதனும் இரு துருவங்களாக இரட்டை குழல் துப்பாக்கியாக இருந்து நிறைவேற்றுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம். பா.ஜ.க எப்போது அதிமுக கூட்டணி வந்ததோ அன்றிலிருந்து முதல்வர் ஸ்டாலின் தூங்கவே இல்லை. ஓடிக் கொண்டிருக்கிறார் அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலினும் ஓடிக் கொண்டிருக்கிறார்.அமைச்சர்கள் கொள்ளையடித்த பணத்தை எங்கு பதுக்கி வைப்பது தெரியாமல் அலைகிறார்கள். திமுக வாக்குறுதிகளை கொடுத்து அதில் 10% வாக்குறுதி கூட நிறைவேற்றாத ஸ்டாலின் அரசு திமுக அரசு இன்று தமிழ்நாடு முழுவதும் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு முகமூடியை கிழித்து கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இந்த கூட்டணி இயங்கும் என்று அமித்ஷா கூறியுள்ளார். அதிலிருந்து சிறப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. நெல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் கூட அமித்ஷா அவர்கள் திமுக வேரோடு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இன்னும் பல கட்சிகள் இந்த கூட்டணியில் வர இருக்கிறது. எழுதி வைத்துக் கொள்ளுங்கள் அதிமுக தனி பெரும்பான்மையுடன் பா.ஜ.கட்சி கூட்டணியோடு ஆட்சி அமைப்பார்கள்” என தெரிவித்தார்.
மாநாட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் GK வாசன் பேசுகையில்:-
“2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் தேவை. அதற்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து பரப்பரை மேற்கொண்டு வருகிறார். வரும் தேர்தல் வளமான தமிழகம் வழுமையான பாரதம் அமைய வேண்டும். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் போன்றவை நடைபெற்று வருகிறது. இதனை தடுத்து நிறுத்த முடியாத அரசாங்கம் நடைபெற்று வருகிறது. சென்ற தேர்தலில் பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சி பீடத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறது. அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தான் இன்றைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணத்தை தொடங்கி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். வரும் காலம் நம்ம காலமாக இருக்க வேண்டும்.
NDA கூட்டணி தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் உள்ளது என தெரிவித்தார்.
மாநாட்டில் பா.ஜ.கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில்:-
“திண்டுக்கல் என்று சொன்னாலே 1972 தான் நினைவுக்கு வரும். ஒவ்வொரு அதிமுக தொண்டனுக்கு ஞாபகத்துக்கு வருவது திண்டுக்கல் இடைத்தேர்தல் தான் அன்றைக்கு மாயத்தேவர் அமோக வெற்றி தான் ஞாபகம் தான் வரும். 2026 தேர்தலில் அதிமுக, பாஜக , தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை இணைந்து மிகப்பெரிய வெற்றி பெற இருக்கிறோம். திண்டுக்கல் என்றாலே பூட்டு நாம போட வேண்டியது திமுக ஆட்சிக்கு வேட்டு. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வருவது உறுதி அதை யாராலும் மாற்ற முடியாது. அதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பாடுபட்டு திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி தமிழகத்தில் ஒரு நல்ல ஆட்சியை உருவாக்க வேண்டும் பாரத பிரதமர் மோடி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரவேண்டும். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வரவேண்டும்” என தெரிவித்தார்.
மாநாட்டில் தமமுக மாநிலத் தலைவர் ஜான்பாண்டியன் பேசுகையில்:-
இங்க கூடியிருப்பது சாதாரண கூட்டம் அல்ல சமூக விடுதலைக்கான கூட்டம். சமத்துவதற்கான போராட்டம் அதற்கான மாநாடு தான் இது. நான் பள்ளியில் படிக்கும் போது sc ஸ்காலர்ஷிப் கொடுப்பார்கள். பள்ளியில் கையை உயர்த்தி சாதி முத்திரை படுத்தினார்கள். விவசாயம் குடும்பத்தில் பிறந்தவன் நான். சாதியை கூறி அடிமைப்படுத்தினார்கள். 50 ஆண்டுகளுக்கு முன்பே எங்கள் மக்களுக்காக போராட ஆரம்பித்தேன். தெரு தெருவாக வீதி வீதியாக சென்று சிவப்பு பச்சைகளை கொடிகளை ஏற்றினேன். அடுத்த சாதிகளை பற்றி நான் பேசியது இல்லை. அன்றைய ஆட்சியாளர்கள் என் மீது விஷத்தை தூவினார்கள். என் மீது எத்தனை வழக்குகள் போடப்பட்டது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சென்று சமுதாய பரப்புரை மேற்கொள்ளும் போது தடை அது கருணாநிதி ஆட்சி. தேர்தலில் நிற்க தொடங்கினேன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இல்லை. என் சமுதாய மக்களை தடை இல்லாமல் சந்திக்க வேண்டும் என்பதற்காக. இனிமேல் சாதிக்கு இடமில்லை சமத்துவத்துக்கு தான் இடம். அது தான் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம். மக்கள் மன மாற்றம் விரும்பி கொண்டிருக்கிறார்கள். அதற்காக போராட வேண்டும். உரிமைக்காக பாடுபட வேண்டும். சாதிக்காக பாடுபட வேண்டாம் சமத்துவதற்காக பாடுபட வேண்டும். நம்முடைய வெற்றி சுயமரியாதை வெற்றி. தேவேந்திர குல வேளாளர்கள் தான் நாட்டிற்கு சோறு போடுகின்ற கூட்டம் உழைக்கின்ற கூட்டம். நரேந்திர மோடி அவர்களால் தேவேந்திர வேளாளர்கள் என்று கொடுக்கப்பட்டது. தேவேந்திரகுல வேளாளர்கள் பட்டியலின சாதி கிடையாது. பட்டியலினத்தில் வெளியே செல்ல இருக்கிறோம். அதற்கு எடப்பாடி முதல்வராக வேண்டும். நரேந்திர மோடியால் மட்டுமே தர முடியும் வேறு எந்த பிரதமர் வந்தாலும் நமக்கு தர மாட்டார்கள் என தெரிவித்தார்.
 
			















