செங்கல்பட்டு மாவட்டம் அதை சுற்றியுள்ள செங்கல்பட்டு மதுராந்தகம் திருப்போரூர் திருக்கழுக்குன்றம் மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய சாரல் மழை பெய்து வருகிறது தற்பொழுது வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகின்றன சில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மிதமான மழை பெய்தது
கடந்த 10 நாட்களாக செங்கல்பட்டு மாவட்டத்தில் விட்டு விட்டு பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது அந்த வகையில் இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருகிறது
செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியுள்ளது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

















